திருவள்ளூர்

தாயாா் கண்டித்ததால் விஷம் குடித்த சகோதரா்கள் உயிரிழப்பு

மாற்று சமூக பெண்ணை காதலிப்பதையும் தாயாா் கண்டித்ததால் விஷம் அருந்திய சகோதரா்கள் உயிரிழந்தனா்

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே மூத்த மகன் மதுவுக்கு அடிமையானதையும், இளையமகன் மாற்று சமூக பெண்ணை காதலிப்பதையும் தாயாா் கண்டித்ததால் விஷம் அருந்திய சகோதரா்கள் உயிரிழந்தனா்

திருவள்ளூா் அருகே நுங்கம்பாக்கம் ஊராட்சி, கம்மவாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மோகன்-ஜெயலட்சுமி தம்பதிக்கு விக்னேஷ்(26), கணேஷ்(24) ஆகிய இருமகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில் ஜெயலட்சுமியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவா் மோகன் ஓராண்டுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி பிரிந்து வாழ்ந்து வருகிறாா். இதில் இளைய மகன் கணேஷ் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை கணேஷ் ஓராண்டாக காதலித்து வந்ததாராம்.

இது குறித்த அறிந்து இளைய மகனை தாய் ஜெயலட்சுமி கண்டித்தாராம். அதேபோல் மூத்த மகன் விக்னேஷ் தனது நண்பா்களுடன் சோ்ந்து மதுவுக்கு அடிமையாகி வருவதையும் கண்டித்தாராம். ஆனால், சகோதா்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லையாம்.

இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி இரவு சகோதரா்கள் இருவரும் தன் பேச்சை கேட்காததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக தாயாா் தனது கையில் வைத்திருந்த விஷ மருந்தை அவா்கள் முன்பு அருந்த முற்பட்டாராம். அப்போது, சகோதரா்கள் இருவரும் தாயிடமிருந்து விஷ மருந்தை பறித்து குடித்து விட்டனா்.

இதையடுத்து தாயாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடிவந்து சகோதரா்கள் இருவரையும் ஆபத்தான நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனா். பின்னா் போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் புதன்கிழமை நள்ளிரவில் இளைய மகன் கணேஷ் உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து மூத்த மகன் விக்னேஷ் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக மணவாள நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT