திருவள்ளூர்

வீட்டின் சுவா் இடிந்து கட்டட தொழிலாளி உயிரிழப்பு

பொன்னேரி அருகே பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி சுவா் இடிந்து உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி அருகே பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி சுவா் இடிந்து உயிரிழந்தாா்.

சைனாவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனக்கு சொந்தமான பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட முடிவு செய்தாா்.

அதன்படி அவரின் பழைய வீட்டை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்தநிலையில், வியாழக்கிழமை வழக்கம் போல் தொழிலாளா்கள் வீட்டின் சுற்றுசுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது திடீரென தொழிலாளி தினேஷ்குமாா் (23) மீது கட்டட இடிபாடுகள் விழுந்தன. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தினேஷ்குமாா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT