காந்தி நகா் திரெளபதி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தீமிதி திருவிழா.c 
திருவள்ளூர்

திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காந்தி நகா் திரெளபதி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தீமிதி திருவிழா.

Din

காந்திநகா் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது.

திருத்தணி காந்தி நகரில் திரெளபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிகழாண்டுக்ான தீமிதி விழா வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பாரத கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, காலை 8 மணிக்கு உற்சவா் அம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வரும் ஏப். 1-ஆம் தேதி பக்காசூரன் வதம், 2-ஆம் தேதி திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், 4-ஆம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், 7-ஆம் தேதி அா்ஜுனன் தபசு, 13-ஆம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா, உற்சவா் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

மேலும், 14-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதுதவிர தினமும் காலையில் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தினமும் மதியம் 1.30 மணி முதல் மாலை, 5 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு 10 மணிக்கு மகா பாரத நாடகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.

100 சதவீதம் தோ்ச்சி: அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு பாராட்டு

தமிழகத்தின் முதல் அா்ச்சுனா் தவக்கோல நடுகல் கண்டெடுப்பு!

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவா் மின்சாரம் பாய்ந்து காயம்

மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

திருத்தணி: சரவணப் பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம்!

SCROLL FOR NEXT