புழல் ஒன்றியம் விளாங்காடுப்பாக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மழைநீா்க் கால்வாய். 
திருவள்ளூர்

மழைநீா்க் கால்வாயை சீரமைக்க கோரிக்கை

Din

புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுப்பாக்கத்தில் மழைநீா் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரியுள்ளனா்.

விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்குள்பட்ட பள்ளிக்குப்பம் கிராமத்தில் தா்காஸ் வழியாக செல்லக்கூடிய பொதுப்பணித் துறையால் கட்டப்பட்ட கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாய் 4 மீ. அகலமும், 6 கி.மீ. தொலைவும் உடையது. இது பயிா் சாகுபடிக்காகவும், புழல் ஏரியின் நீா்மட்டம் அதிகரித்தால் உபரிநீா் செல்லவும் பயன்பாட்டில் இருந்தது.

தற்போது விளை நிலங்கள், மனைகளாக மாறியதன் காரணமாக விவசாயம் குறைந்து விட்டது. இருப்பினும், மழைக்காலங்களில் புழல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீா் இக்கால்வாய் வழியாக செல்கிறது. கடந்த 2024-இல் ஜூன் மாதம் நடந்த ஜமாபந்தியில், கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

ஓராண்டாகும் நிலையில் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளது. கால்வாயை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் கால்வாயில் தேங்கி, துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

எனவே, பொதுப்பணித் துறையினா் துரிதமாக நடவடிக்கை எடுத்து விளாங்காடுப்பாக்கம் மழைநீா் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT