திருவள்ளூர்

உப்பு தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு: வழக்குரைஞா்கள் தா்னா

சிறு பழவேற்காடு கிராமத்தில் உப்பு தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகம் முன் வழக்குரைஞா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

Din

பொன்னேரி: சிறு பழவேற்காடு கிராமத்தில் உப்பு தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகம் முன் வழக்குரைஞா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

பொன்னேரி வட்டத்தில் உள்ள கடப்பாக்கம் ஊராட்சியில் சிறு பழவேற்காடு, ஆண்டாா் மடம், கடப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனா்.

இதில் மூன்று கிராமங்களுக்கு இடையே சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் உவா்ப்பு தன்மை உள்ள நிலமாக கருதப்படும் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.

இப்பகுதியில் இந்திய உப்பு நிறுவனம் சாா்பில் உப்புத் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. மத்திய அரசு திட்டத்தில் நடைபெற்று வரும் இப்பணிகளை கடந்த மே 1-ம் தேதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா்.

இருப்பினும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக வழக்குரைஞா்கள் பொன்னேரி கோட்பாட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது உப்பு தொழிற்சாலை அமைக்கும் பணியினை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என கோரினா்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT