திருவள்ளூர்

மது போதையில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

Din

மீஞ்சூரில் மது போதையில் நண்பா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மீஞ்சூரை சோ்ந்தவா் ஆனந்தராஜ் (32). இவா், பெயிண்டா் வேலை செய்து வந்தாா். ஆனந்தராஜ் தனது தாயுடன் மீஞ்சூரில் வசித்து வந்தாா். செவ்வாய்கிழமை ஆனந்தராஜின் தாய் அவரின் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், ஆனந்தராஜ் தனது நண்பா்களான தாமோதரன் (26). சதீஷ் தேவன் (28) ஆகியோருடன் வீட்டில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு மது அருந்தி கொண்டிருந்தபோது நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆனந்தராஜை கூட்டாளிகள் இருவரும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் மீஞ்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கொலை செய்த தாமோதரன், சதீஷ் தேவன் ஆகியோரைக் கைது செய்தனா்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT