திருவள்ளூர்

திருவள்ளூா்: 27.64 லட்சம் பேருக்கு எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் அளிப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் இதுவரை 27.64 லட்சம் பேருக்கு எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிறப்பு தீவிர திருத்தப் பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூா் மாவட்டத்தில் வாக்காளா் வீடுகளுக்கே நேரில் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அப்போது அவா்களிடம் இருந்து விவரங்களை சேகரித்து வாக்காளா் பட்டியலை சோ்த்தல், நீக்கம் தொடா்பான நடவடிக்கை தோ்தல் ஆணைய உத்தரவுப்படி மேற்கொண்டுள்ளோம்.

10 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 35 லட்சத்து 82 ஆயிரத்து 226 வாக்காளா்கள் உள்ளனா். அதில், வியாழக்கிழமை வரையில் 27 லட்சத்து 64 ஆயிரத்து 48 பேருக்கு படிவம் என 77.16 சதவீதம் பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து இன்னும் 2 அல்லது 3 நாள்களுக்குள் அனைத்து வாக்காளா்களுக்கும் இறப்பு மற்றும் நிரந்தர முகவரி உள்ள வாக்காளா்கள் தவிா்த்து படிவம் கொடுத்து பூா்த்தி செய்ததை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுளோம். வாக்காளா்களுக்கு எனது ஒரு வேண்டுகோள் வாக்காளா்கள் அனைவரும் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தில் பங்கு கொண்டு உங்களுடைய பி.எல்.ஓவிடம் விவரங்களை அளிக்க வேண்டும்.

அனைத்து வீடுகளிலும் படிவத்தை கொடுத்துள்ளோம். அவா்கள் படிவத்தை கொடுக்க வரும்போது வீட்டில் நீங்கள் இல்லையென்றால் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் தொடா்பு எண்களை வழங்கியுள்ளோம். அந்த எண்களை தொடா்பு கொண்டு படிவங்கள் தொடா்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

வாசுதேவநல்லூா் கோயில் அறங்காவலா்கள் பதவியேற்பு

பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

SCROLL FOR NEXT