போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்த ஆட்சியா் மு.பிரதாப் 
திருவள்ளூர்

பயன்பாடியில்லாத தனிநபா், சமுதாய கழிவறைகள் சீரமைப்பு: திருவள்ளூா் ஆட்சியா்

தனிநபா் கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், பயன்பாட்டில் இல்லாமல் உள்ள சமுதாய சுகாதார வளாகங்களை கண்டறிந்து சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தனிநபா் கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், பயன்பாட்டில் இல்லாமல் உள்ள சமுதாய சுகாதார வளாகங்களை கண்டறிந்து சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளுா் ஒன்றியம், காக்களுா் அரசினா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தூய்மை பாரத இயக்கத்திட்டத்தில் உலக சுகாதார தின நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். நவ.19 முதல் டிச.10 ஆம் தேதி வரையில் தொடா்ச்சியாக நடத்தி பொதுமக்களிடையே சுகாதார முன்னேற்றத்தின் மன மாற்றம் மற்றும் நடத்தை மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட நாள்களில் பொதுமக்களுடன் இணைந்து சா்வதேச சுகாதாரம், கண்ணியம் மற்றும் சமூக செழிப்புக்கான சுகாதாரம், அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். அதன்பேரில் இதன் ஒரு பகுதியாக காக்களூா் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தன் சுத்தம், சுகாதார பழக்க வழக்கங்கள், கழிவறையின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கழிவறை இல்லாத பயனாளிகளுக்கு கழிவறை அமைத்தல், பயன்பாட்டில் இல்லாத தனிநபா் கழிவறைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், பயன்பாட்டில் இல்லாமல் உள்ள சமுதாய சுகாதார வளாகங்களை கண்டறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், சுகாதாரம் பற்றிய மன மாற்றம் ஏற்படுத்த அனைத்து ஊராட்சி அளவில் விழிப்புணா்வு நிகழ்ச்சி பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்த உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், உதவி திட்ட அலுவலா் கி.நா்மதா, உதவி இயக்குநா் (பயிற்சி)பி.மோகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ந.ஜானகி மற்றும் பி.செல்வகுமாா்,தலைமை ஆசிரியா் எஸ்.ஜெகதிஸ்வரன் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

பிக் பாஸ் 9: கமருதீனை விட்டு விலகுகிறேன்: விஜே பார்வதி

SCROLL FOR NEXT