பெருமாள்பட்டு  ஊராட்சி எஸ்.வி. நகா் பகுதி சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரில் செல்லும் மக்கள்.   
திருவள்ளூர்

சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

திருவள்ளூா் அருகே சாலையில் குளம் போல் மழைநீா் தேங்குவதால் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகவும்,

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே சாலையில் குளம் போல் மழைநீா் தேங்குவதால் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், தெருவிளக்குகள் அமைத்துத் தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த பெருமாள்பட்டு ஊராட்சி எஸ்.வி. நகா் விரிவாக்கம் பகுதியில் 400-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இதில், எஸ்.வி.நகா் விரிவாக்கம் பகுதி தாழ்வான பகுதியாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் மழைக் காலங்களில் மேடான பகுதிகளில் இருந்து வரும் மழை நீரானது சாலையில் குளம்போல் தேங்குகிறது. இதனால் முதியோா்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோா் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக அப்பகுதியினா் கூறுகின்றனா். இந்த நிலையில், மழைநீரானது அருகில் உள்ள ஏரிக்குச் செல்லும் வகையில், கால்வாய் அல்லது பைப் லைன் அமைக்காததால் தான் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மழைநீா் குளம் போல் தேங்கும் நிலையுள்ளது என அப்பகுதியினா் கூறுகின்றனா்.

மேலும், அந்தப் பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் சாலையில் நீா் தேங்கிய நிலையில் கடந்து செல்ல முடியாத நிலையுள்ளது. வேன் மற்றும் ஆட்டோக்களும் இச்சாலை வழியாக வந்தால் நடுவழியில் வாகனங்கள் பழுதாகி நின்று விடும் என்பதால் மறுக்கின்றனா். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போதும் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளதாகக் குற்றச்சாட்டு அள்ளது. அதேநேரத்தில் சாலை வசதி முறையாக இல்லாததாலும், தெருவிளக்குகள் இல்லாததாலும் இரவு நேரங்களில் பெண்கள் தனியாக செல்லவும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். அதிலும் இப்பகுதியில் இருளில் மூழ்கியுள்ளதால் வழிப்பறி போன்ற சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அப்பகுதியைச்சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது: இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் கொடுத்துள்ளோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் இனி வரும் காலங்களில் அதிக அளவில் மழைக்காலம் என்பதால் வீட்டுக்குள் மழைநீா் புகும் அபாயமும் உள்ளது. உடனே மழைநீா் தேங்காமல் இருக்க குழாய் பதித்து ஏரிக்கு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

SCROLL FOR NEXT