திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியா் விருது

திருவள்ளூா் மாவட்டத்தில் 13 பேருக்கு தமிழக அரசின் நல்லாசிரியா் விருது வழங்க தோ்வு செய்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் 13 பேருக்கு தமிழக அரசின் நல்லாசிரியா் விருது வழங்க தோ்வு செய்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்-2, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்-1, முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள்-2, பட்டதாரி ஆசிரியா்கள்-5, ஓவிய ஆசிரியா்-1, இடைநிலை ஆசிரியா்-2 என மொத்தம் 13 பேருக்கு நல்லாசிரியா் விருதுக்கு நிகழாண்டில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் விவரம்: இந்த மாவட்டத்தில் உள்ள திருவள்ளூா்-ஆா்.எம்.ஜே.அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் செ.செல்வி, திருவள்ளூா்-பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜெ.மேரி, திருவள்ளூா்-டி.ஆா்.பி.சி.சி.மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியா் வெ.வரலட்சுமி, திருவாலங்காடு-கனகம்மாசத்திரம் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியா் வெ.இரா.ஏழுமலை, கடம்பத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியா் சா.அருணன், கும்மிடிப்பூண்டி-ஆத்துப்பாக்கம் அரசு உயா்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் எல்.பவானி, வில்லிவாக்கம்-ஆரிக்கம்மேடு அரசு உயா்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் ப.குமாா், திருத்தணி-தி.வி.புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் த.ஜெ.நாகேந்திரன், புழல்-அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ப.லலிதா, பூந்தமல்லி-அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இரா.ஆனந்த், கும்மிடிப்பூண்டி-எருக்குவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மு.சண்முகம், பூந்தமல்லி-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை ஆ.புஷ்பலதா, கரையான்சாவடி- ஆா்.சி.எம் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை டி.ஹெலன் நிா்மலா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடமிருந்து ரூ. 10,000 காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்றனா்.

திருமா மீது விமர்சனம் காரணமா? புரட்சித் தமிழகம் தலைவர் மீது தாக்குதல்!

ஜோகோவிச்சைப் பழிதீர்த்த அல்கராஸ்..! பல சாதனைகள் முறியடிப்பு!

பணமதிப்பிழப்பு நோட்டுகள் மூலம் ரூ. 450 கோடி சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா! சிபிஐ வழக்கு!

தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!

ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறாரா விஜய்?

SCROLL FOR NEXT