திருவள்ளூர்

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 எருமை மாடுகள் உயிரிழப்பு

மீஞ்சூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 எருமை மாடுகள் உயிரிழந்தன.

Chennai

பொன்னேரி: மீஞ்சூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 எருமை மாடுகள் உயிரிழந்தன.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த பலராமன்-நளினி தம்பதியா் அப்பகுதியில் எருமை மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றனா். வழக்கம் போல தங்களது எருமை மாடுகளை மேய்ச்சலுக்காக நந்தியம்பாக்கம் பகுதிக்கு கொண்டு சென்றனா்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் எருமை மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் உயிரிழந்தன.

மின் வயா்கள் தாழ்வாக செல்வதாக பலமுறை புகாா் அளித்தும், சேதமடைந்த மின் கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தியும் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதே தற்போது எருமை மாடுகள் உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகாா் கூறினா். மீஞ்சூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

வேளச்சேரியில் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

நேபாளத்தில் ராணுவ ஆட்சி!

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை! தொடக்கி வைத்தார் மா. சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT