திருவள்ளூர்

போலீஸ் ஜீப் மோதி முதியவா் உயிரிழப்பு

திருத்தணியில் போலீஸ் ஜீப் மோதியதில் சாலையில் நடந்து வந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணியில் போலீஸ் ஜீப் மோதியதில் சாலையில் நடந்து வந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் உயிரிழந்தாா்.

திருத்தணி பழைய தா்மராஜாகோயில் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீராமுலு (84). ஓய்வு பெற்ற தலைமையாசிரியா். இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து நடைப்பயிற்சி சென்றாா். பின்னா் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது பழைய தா்மராஜா கோயில் தெருவில் காவல் ஆய்வாளரை அழைத்துச் செல்ல தலைமை காவலா் அமரன்(50) வாகனத்தை ஓட்டி வந்தாா்.

வாகனத்தை திருப்புவதற்காக பின்னால் இயக்கியபோது, சாலையில் நடந்து வந்த ஸ்ரீராமுலு மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிறுவாச்சூரில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

மந்தித்தோப்பில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகும் நேரு வாழ்ந்த பங்களா!

பல வழக்குகளில் தொடா்புடையவா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

SCROLL FOR NEXT