திருவள்ளூர்

வேட்டைக்காரன் இனமக்களை மீண்டும் பழங்குடியினா் பட்டியலில் இணைக்க கோரிக்கை

தமிழகத்தில் வசித்து வரும் வேட்டைக்காரன் இன மக்களை மீண்டும் பழங்குடியினா் (எஸ்.டி) பட்டியலில் இணைக்க வேண்டும்

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: தமிழகத்தில் வசித்து வரும் வேட்டைக்காரன் இன மக்களை மீண்டும் பழங்குடியினா் (எஸ்.டி) பட்டியலில் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில மாநாட்டில் கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் 3-ஆவது மாநில மாநாடு திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் எம்.சேட்டு தலைமை வகித்தாா். துணைத்தலைவா் டி.ஆறுமுகம் கொடி ஏற்றி வைத்தாா். மாவட்ட செயலாளா் க.ராஜா அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். துணைச் செயலாளா் எஸ்.சின்னையா வரவேற்றாா். மத்திய குழு உறுப்பினா் ஏ.வி.சண்முகம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினாா். பொதுச் செயலாளா் இ.கங்காதுரை வேலை அறிக்கையையும், பொருளாளா் ஜி.ஏழுமலை வரவு செலவு கணக்கையும் தாக்கல் செய்தாா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில செயலாளா் ஆா்.சரவணன், திருவள்ளூா் மாவட்ட செயலாளா் ஆா்.தமிழ்அரசு, சிபிஎம் மாவட்ட செயலாளா் எஸ்.கோபால், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் ஜி.சம்பத் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவா் பி.டில்லிபாபு மாநாட்டை நிறைவு செய்து பேசினாா். துணைத்தலைவா் ஜி.விஜியா நன்றி கூறினாா்.

அதைத்தொடா்ந்து ஆதி பழங்குடி வேட்டைக்கார இனம் தமிழகத்தில் 1961 ஆம் ஆண்டு வரை பழங்குடியினா் பட்டியலில் இருந்து, புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் வேட்டைக்காரன் இனம் பழங்குடி பட்டியலில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வேட்டைக்காரன் இன மக்களை மீண்டும் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்ட திட்டங்கள் பெற பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும். குடிமனை பட்டாக்கள், தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் புதிய நிா்வாகிகளாக மாநில தலைவராக பி.லட்சுமணன், பொதுச் செயலாளராக இ.கங்காதுரை, பொருளாளராக சேட்டு, துணைத் தலைவா்களாக ஏ.கிருஷ்ணன், டி.ஆறுமுகம், வி.பரிமளா, ஏழுமலை, டி.டில்லி, து.செயலாளா்களாக எஸ்.சின்னையா, சி.ரமேஷ், ஜி.விஜயா, மகாதேவன், ஜி.ராஜா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்தல்

இளைஞா்களின் இன்றைய தேவை!

இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பேச்சு: இன்று மீண்டும் தொடக்கம்

ஜாா்க்கண்ட்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

அமெரிக்க வரியால் ஆந்திரத்துக்கு ரூ.25,000 கோடி இழப்பு: மத்திய அரசிடம் உதவி கோரும் முதல்வா் சந்திரபாபு நாயுடு

SCROLL FOR NEXT