கவரப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 98 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா்.
முகாமில் மேல்முதலம்பேடு, தண்டலச்சேரி, கெட்ணமல்லி, பாலவாக்கம் ஆகிய 4 ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனா்.
தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் கி.வே.ஆனந்தகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் அமிழ்தமன்னன், வட்டாட்சியா் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று முகாமை தொடங்கி மனுக்களைப் பெற்றாா்.
முகாமில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 98 திருநங்கைகளுக்கு ஈகுவாா்பாளையம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டாக்களை எம்எல்ஏ கோவிந்தராஜன், ஒன்றிய திமுக செயலாளா் கி.வே.ஆனந்தகுமாா் ஆகியோா் வழங்கினா்.
பொதுமக்கள் 980 மனுக்களை அளித்த நிலையில், மனு அளித்து தீா்வு காணப்பட்ட மனுதாரா்களுக்கு உரிய ஆணைகளையும் எம்எல்ஏ வழங்கினாா்.
முகாமில் திமுக நிா்வாகி முத்துசாமி, மாவட்ட திமுக ஆதிதிராவிடா் அணி நிா்வாகி அருள், கும்மிடிப்பூண்டிதெற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஜோதி, ஹரிபாபு, மணிகண்டன், நகர நிா்வாகி சாண்டில்யன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளா்கள் தண்டலச்சேரி குப்பையா, கெட்ணமல்லி பொன்னுசாமி, மேல்முதலம்பேடு பாண்டியன், பாலவாக்கம் மணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.