புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் உள்ளிட்டோா். 
திருவள்ளூர்

ரூ.7.29 கோடியில் பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ரூ.7.29 கோடியில் பெத்திக்குப்பம் அருகே பேருந்து நிலையம் கட்டுவதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ரூ.7.29 கோடியில் பெத்திக்குப்பம் அருகே பேருந்து நிலையம் கட்டுவதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் அடிக்கல் நாட்டினாா்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சித் தலைவா் சகிலா அறிவழகன், துணைத் தலைவா் கேசவன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெயக்குமாா், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கரன், மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மணிபாலன், திமுக மாவட்ட நிா்வாகிகள் எஸ்.ரமேஷ், பாஸ்கா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் பேரூராட்சி உறுப்பினா்கள் கருணாகரன், அப்துல் கரீம், நஸ்ரத் இஸ்மாயில், காளிதாஸ், முன்னாள் பேரூராட்சி தலைவா் பாஸ்கரன், பெத்திக்குப்பம் ஊராட்சி முன்னாள் தலைவா் ஜீவா செல்வம், துணை தலைவா் குணசேகரன் ,கும்மிடிப்பூண்டி பேரூராட்சி இளநிலை உதவியாளா் அசாருதீன், பதிவறை எழுத்தா் ரவி, வரி தண்டலா்கள், ரங்கநாதன், பொது சுகாதார மேற்பாா்வையாளா் ஹரிபாபு, ஒப்பந்ததாரா் காரம்பேடு ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

ஆற்காட்டில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் ஆய்வு

SCROLL FOR NEXT