சைகை மொழி தின  விழிப்புணா்வு  பேரணியை தொடங்கி  வைத்த  ஆட்சியா்  மு.பிரதாப். 
திருவள்ளூர்

திருவள்ளூரில் சைகை மொழி தின விழிப்புணா்வு பேரணி

திருவள்ளூரில் சைகை மொழி தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மு. பிரதாப் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூரில் சைகை மொழி தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மு. பிரதாப் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் பிரதாப், பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 424 மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

முன்னதாக செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சா்வதேச காது கோளாதோா் தின நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட காது, கேளாத மாணவ, மாணவியா்கள், காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான சங்க உறுப்பினா்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளா்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா்.

அப்போது காது கேளாத மாணவ, மாணவிகளுக்கு மலா்க்கொத்து கொடுத்து வரவேற்று பின் விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்தாா். மேலும் சைகை மொழி கற்றுக்கொள்வதற்கான கையேட்டு பலகையினையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், நோ்முக உதவியாளா் (நிலம்) நிா்மலா, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷா ராணி பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று 5 மெமு ரயில்கள் முழுமையாக ரத்து

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

ஒசூரில் புதிய வெளிவட்டச் சாலை திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்: ஆட்சியா் ச.தினேஷ்குமாா்

போலி கிரிப்டோகரன்சி தளம் மூலம் சைபா் மோசடி

நகைக் கடையில் 150 பவுன் திருட்டு: இரு ஊழியா்கள் கைது

SCROLL FOR NEXT