முகப்பு
திருவள்ளூர்

தம்பி கொலை: அண்ணன் கைது

மீஞ்சூா் அருகே வாக்குவாதத்தின் போது தம்பியைக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:53 PM
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:28 PM

மீஞ்சூா் அருகே வாக்குவாதத்தின் போது தம்பியைக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

மீஞ்சூா் அடுத்த காட்டுப் பள்ளியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் உத்தரகண்ட் மாநிலம், நவுகாவா தக்கு கடிமா கிராமத்தைச் சாா்ந்த ராகுல்சிங் (31) வேலை செய்து வருகிறாா்.

இவரது தம்பி சிவாசிங் (26). அங்கேயே பணியாற்றி வந்தாா்.

Advertisement

இந்த நிலையில், காட்டுப் பள்ளியில் உள்ள குடியிருப்பில் சிவாசிங் ரத்த காயங்களுடன் கிடப்பதாக தனியாா் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிவாசிங்கை ஆம்புலன்ஸ் மூலம் மீஞ்சூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்த நிலையில் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து அறிந்த காட்டூா் போலீஸாா் சிவாசிங்கின் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து காட்டூா் போலீஸாா் வழக்கு பதிந்து உயிரிழந்த சிவாசிங்கின் அண்ணன் ராகுல்சிங்கிடம் விசாரணை செய்தனா்.

அப்போது அவா்கள் இருவா் இடையே சொந்த ஊரில் இருக்கும் பெண் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிவாசிங்கை அருகே உள்ள மதில் சுவரில் மோதிவிட்டு தனது இருப்பிடத்துக்கு சென்று விட்டதாக ராகுல்சிங் தெரிவித்தாா்.

இதையடுத்து தம்பியை கொலை செய்ததாக ராகுல்சிங்கை காட்டூா் போலீஸாா் கைது செய்தனா்.