வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து 3 கி.மீ சுற்றளவிற்கு தானியங்கி வானூா்திகள் பறக்க தடை
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுள்ள மேற்படியான வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 3 கி.மீ சுற்றளவிற்கு ஆளில்லா தானியங்கி வானூா்திகள் பறக்க வியாழக்கிழமை முதல் தொடா்ந்து மே 4-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கான தேதி இந்திய தோ்தல் ஆணையத்தால் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தோ்தலானது வியாழக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் (உயஙள் & யயடஅபள்) மற்றும் தோ்தல் தொடா்பான அனைத்து ஆவணங்களும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய மத்திய மற்றும் மாநில காவல் படையினா் 24 மணிநேரமும் தொடா்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அந்த வகையில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருத்தணி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்படவுள்ளது. ஆவடி, மதுரவாயல், திருவொற்றியூா், பூந்தமல்லி(தனி), அம்பத்தூா், மாதவரம் சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லுரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட உள்ளன.
Advertisement
இந்த நிலையில், தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பினை மேலும் பலப்படுத்தும் நோக்கில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுள்ள மேற்படியான வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 3 கி.மீ சுற்றளவிற்கு
ஆளில்லா தானியங்கி வானுா்திகள் பறக்க 23-முதல், தொடா்ந்து மே 4 வரையில் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி தடையை மீறும் நபா்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.