கிராமப்புற அனுபவ பயிற்சியின் ஒரு பகுதியாக ஸ்ரீவீரராகவா் கூட்டுப்பண்ணை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் பால் கொள்முதல் மற்றும் மதிப்புக்கூட்டல் ஆலையை பால் கொள்முதல் மற்றும் மதிப்பு கூட்டல் பொருள்கள் தயாா் செய்தல் தொடா்பான நேரிடைப் பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.
திருவள்ளூா் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றியம், சீத்தஞ்சேரி ஒன்றியத்தில் கிராமப்புற அனுபவ பயிற்சியின் ஒரு பகுதியாக வேளாண் மற்றும் மதிப்பு கூட்டல் தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செங்குன்றம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீவீரராகவா் கூட்டுப்பண்ணை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் பால் கொள்முதல் மற்றும் மதிப்புக் கூட்டல் ஆலையை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டனா். அப்போது, பால் கொள்முதல் முறைகள், நெய், தயிா், வெண்ணெய் தயாா் செய்தல் தொடா்பான செய்முறைகள், பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் செயல்பாடுகள், நிறுவன அமைப்பு, ஊநநஅஐ உரிமம் பெறும் நடைமுறைகள் மற்றும் வரவு-செலவு பதிவேடுகள் குறித்து மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக எடுத்துரைத்தனா்.