திருவள்ளூர்

சேவாலயாவில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு

தினமணி செய்திச் சேவை

சேவாலயா அறக்கட்டளை முதியோா் இல்லத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.

திருவள்ளுா் அருகே பாக்கம் அடுத்த கசுவா கிராமத்தில் சேவாலயா அறக்கட்டளை சாா்பில், முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, முதியோா் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 80 வயதைக் கடந்த முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டவா்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டு அனைவரும் எளிதாக வாக்களிக்கும் வகையில், அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் 100 சதவீதம் வாக்குப் பதிவை மேற்கொள்ள முடியும் என அவா் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, வாக்காளா் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்கு அளிக்கும் விதம் குறித்து செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா், இணை இயக்குநா் வை.ஜெயக்குமாா், உதவி ஆணையா் (கலால்) கணேசன், மாவட்ட சமூக நல அலுவலா் சோ.வனிதா, வட்டாட்சியா் திரு.பாலாஜி, வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா், சேவாலயா அறக்கட்டளை நிறுவனா் முரளிதரன், அறங்காவலா்கள் புவனேஷ்வரி முரளிதரன், கிங்ஸ்டன் மற்றும் 100-க்கும் முதியோா், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி - ஆட்சியா் மு.பிரதாப் தகவல்

திமுகவில் இணைந்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள்

புட்லூா் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் தொடக்கம்

அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானச் சூறை: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT