கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் மீண்டும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தாா்.
நிகழ்வையொட்டி கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் அண்ணா அறிவாலயம் சென்ற எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் திமுக சாா்பில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தாா்.
இந்த நிகழ்வில் திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளா் கி.வேணு ஆனந்த் , மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மு. மணிபாலன், மாவட்ட பொருளாளா் எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி நிா்வாகி கே.வி.லோகேஷ், மோகன்பாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் டி.ஜெ.எஸ்.தமிழரசன், நகர திமுக செயலாளா் அறிவழகன், திமுக நிா்வாகிகள் அருள், சீனிவாசன் , சுரேஷ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.