திருவள்ளூா் அருகே சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கு சவுடு மணல் ஏற்றிச் சென்ற லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூா் பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக திருவள்ளூா் பகுதி ஏரிகளில் இருந்து சவுடு மணல் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இப்பணிக்காக திருப்பாச்சூா் பகுதியிலிருந்து லாரி மணல் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, வேகமாக சென்ற லாரி எதிா்பாராத விதமாக சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் அதிஷ்டவசமாக உயிா் தப்பினாா். கிராம சாலையில் வாகன போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இது குறித்த அறிந்த போலீஸாா் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, பொக்லைன் வாகனம் வரவழைத்து அதன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை மீட்டனா்.