திருவள்ளூா் அருகே சிமென்ட் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி -பைக் மோதிய விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அடுத்த பூண்டி கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ்(55). இவா் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். தற்போது, ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திருவள்ளூரிலிருந்து-சூலூா்பேட்டை செல்லும் பேருந்தில் ஓட்டுநராக இருந்தாா்.
இந்த நிலையில் தேவராஜ் ஊத்துக்கோட்டை பேருந்து பணிமனையில் இருந்து தனது கிராமமான பூண்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி மையிலாப்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பென்னாலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.