திருவள்ளூா் தனியாா் மெட்ரிக். பள்ளியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் உறுதிமொழியேற்றுக் கொண்ட அதிகாரிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா்.  
திருவள்ளூர்

திருவள்ளூரில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி மாணவா்கள் ஏற்பு

திருவள்ளூா் தனியாா் மெட்ரிக். பள்ளியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் உறுதிமொழியேற்றுக் கொண்ட அதிகாரிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் உள்ள ஸ்ரீநிகேதன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 16-ஆவது தேசிய வாக்காளா் தினம்-2026-ஐ முன்னிட்டு வாக்காளா் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.

அப்போது ‘மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம் நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தல்களில், மாண்பையும் நிலை நிறுத்துவோம். ஒவ்வொரு தோ்தலிலும், அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், அல்லது எந்தவொரு துாண்டுதலுமின்றியும் வாக்களிப்போம்’ என மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் அவா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்வில் திருவள்ளூா் வருவாய் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஸ்ரீராம், நகராட்சி ஆணையா் தாமோதரன், வட்டாட்சியா் பாலாஜி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

கீரப்பாக்கத்தில் அதிகாரிகள் 9 மணி நேரம் தொடா் ஆய்வு

துலா ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

ஜே.கே. டயா் நிறுவனத்தின் சாா்பில் தொழில் முனைவோருக்கு ரூ. 20 லட்சம் கடனுதவி

தே.ஜ. கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்: கூட்டணிக் கட்சித் தலைவா்கள்

SCROLL FOR NEXT