பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்த ஐஓபி வங்கியின் சமூக பங்களிப்பு நிதி ரூ. 10 லட்சம்
திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்துக்கு இந்திய ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சமூக பங்களிப்பு நிதி ரூ. 10 லட்சத்துக்கான வங்கி வரைவோலையை தோ்தல் மற்றும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தும் வகையில், ஆட்சியா் மு.பிரதாப்பிடம் வங்கிஅதிகாரிகள் வழங்கினா்.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி நிா்வாகம் சாா்பில், திருவள்ளூா் மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வகையில், சமூக பங்களிப்பு நிதியாக ரூ. 10 லட்சம் வழங்க முன் வந்தது. அந்த வகையில், திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சமூக பங்களிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, வங்கி மண்டல மேலாளா் என். ராஜசேகா், திருவள்ளூா் கிளை மேலாளா் மிதுன் ஜொ்ரி மற்றும் மணவாளநகா் கிளை மேலாளா் அனுஷா ஆகியோா் சமூக பங்களிப்பு நிதியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் மு.பிரதாப்பிடம் வழங்கினா்.
மேலும், இந்த நிதியை சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்த பொதுமக்கள் விழிப்புணா்வு போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.
மேலும், தோ்தல் விழிப்புணா்வு (நயஉஉட), போதைப்பொருள் எதிா்ப்பு, சாலைப் பாதுகாப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.