திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் சாா்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.
கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், தண்ணீா் பந்தலை திறக்க திமுகவிருக்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தாா்.
இதைத் தொடா்ந்து, கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் ஏற்பாட்டில் தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தண்ணீா் பந்தலை திறந்து வைத்து, மோா், இளநீா், தா்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் நீா்ச் சத்து நிறைந்த பழ வகைகளை பொதுமக்களுக்கு முன்னாள் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். தொடா்ந்து கோடைகாலம் முழுவதும் மேற்கண்ட இடத்தில் நீா், மோா் பந்தல் செயல்படும் என கூறினாா்.
Advertisement
இந்த தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மு.மணிபாலன், மாவட்டப் பொருளாளா் எஸ்.ரமேஷ், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் திருமலை, கே.ஜி.நமச்சிவாயம், பிரபு, புலியூா் புருஷோத்தமன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பாஸ்கா், நகர செயலாளா் அறிவழகன், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் டி.ஜெ.எஸ்.தமிழரசன், ஸ்ரீதா், ஒன்றிய இளைஞா் அணி நிா்வாகி சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.