தொழில் மலர் - 2019

உலக அளவில் சாதனை படைத்து வரும் அல்ட்ரா மரைன்..!

DIN

உலக தரம் வாய்ந்த நீலம், சலவைத் தூள், ஷாம்பு, கிளீனிங் லிக்விட் உள்ளிட்ட மூலப் பொருள்கள் உற்பத்தியில் அல்ட்ரா மரைன் அண்டு பிக்மென்ட்ஸ் நிறுவனம் 43 ஆண்டுகால அனுபவத்துடன் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து சாதனை படைத்து வருகிறது.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள இந்நிறுவனம் 1975-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் அல்ட்ராமரைன் நீலம் (ULTRAMARINE 
BLUE) உள்நாட்டில் விற்பனை செய்வது மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 
சோப்பு, ஷாம்பூ போன்றவை தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் LABSA, AOS, உற்பத்தி செய்து உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டிலும் விற்பனை செய்து வருகிறது. தனது மூலப்பொருள்கள் உற்பத்தி தரத்துக்காக ஐநஞ 9001, சுற்றுப்புறச்சூழலுக்காக ISO 14001, தொழில்சார்ந்த பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் ஆரோக்கியத்துக்காக OHSAS 18001, தங்களுடைய உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்கள் கொண்டு வரும் வாகன ஓட்டுநர்கள் முதல்கொண்டு தங்களுடைய உற்பத்தியை உபயோகிக்கும் நுகர்வோர் வரை பொருள்களைக் கையாளும்போது, பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் உறுதிபூண்டுள்ளது.
இதனால் RC (RESPONSIBLE CARE) எனும் சான்று பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் ஆய்வுக் கூடமானது NABL (National Accreditation Board For Testing and Calibration Laboratories). மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அரசின் DSIR (Department of Science and Industrial Research) அங்கீகாரத்தை பெற்றுள்ளது. தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் பாதுகாப்பு விருதை தொடர்ந்து பெற்று வருகிறது.
இந்நிறுவனத்தினர் சூரிய மின் தகடுகளை (Solar Panel) பொருத்தி மின் உற்பத்தி செய்கின்றனர். தவிர Solar Thermal Concentrator மூலமாக சூரிய வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி அவர்களின் உற்பத்தியை உலர வைத்து, இதன் மூலமாக எரிபொருள் குறைக்கப்பட்டு, கார்பன் டை ஆக்சைடு வெளியாவது கட்டுப்படுத்தப்படுகிறது. 
மேலும் காற்றாலை மூலமாக மின் உற்பத்தி செய்து, உபயோகிப்பதன் மூலம் இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறது. இதற்காக இந்த ஆண்டுக்கான TECA (TAMILNADU ELECTRICITY CONSUMER'S ASSOCIATION) வழங்கிய GO GREEN INITIATIVE AWARD விருதைப் பெற்றனர்.
சமுதாயப் பணிகளில்... 
இந்நிறுவனத்தினர் உற்பத்தி, வர்த்தகம் என்று மட்டும் இல்லாமல் சுற்றுவட்டாரத்திலுள்ள அரசு மற்றும் நிதி பற்றாக்குறையுள்ள பள்ளிகளுக்கு கழிப்பறைகளை கட்டிக்கொடுத்து அவைகளை சிறப்பாகப் பராமரித்து வருவதே சமுதாய நலனில் இவர்களின் அக்கறைக்கு சான்றாக விளங்குகிறது. 
அதுமட்டுமல்லாமல் தேசிய சுற்றுச்சூழல் தினம், தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் குழந்தைகள் தினம் போன்ற குறிப்பிட்ட நாள்களில் அருகிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கவிதை மற்றும் அறிவுத் திறன் போட்டிகளை நடத்தச் செய்து, பரிசுகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றனர். கடந்த 44 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கிவரும் இந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்புடன் பல புதிய பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்நிறுவனத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT