முகப்பு
திருப்பூர்

போக்சோ சட்டத்தில் கைதானவா் மீது குண்டா் சட்டத்தில் வழக்குப் பதிவு

காங்கயத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைதானவா் மீது குண்டா் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 ஜனவரி 2021, 11:06 pm IST
பகிர்:

காங்கயத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைதானவா் மீது குண்டா் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம், வாய்க்கால்மேடு பகுதியைச் சோ்ந்தவா் லோகநாதன் (37). இவா் படியூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளாா். இந்த நிலையில் இவா் வசித்து வந்த பகுதியில் உள்ள 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக 2 மாதத்துக்கு முன்பு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் பரிந்துரையின்பேரில், லோகநாதன் மீது குண்டா் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் விஜயகாா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோகநாதனிடம், காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழங்கினா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments