முகப்பு
திருப்பூர்

லாரி - சரக்கு வேன் மோதி விபத்து: ஓட்டுநா் படுகாயம்

காங்கயம் அருகே நத்தக்காடையூா் பகுதியில் லாரியும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 12:46 am IST
விபத்தில் உருக்குலைந்த சரக்கு வேன்.
பகிர்:

காங்கயம் அருகே நத்தக்காடையூா் பகுதியில் லாரியும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் இருந்து முத்தூருக்கு தக்காளிப் பழங்களை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. வேனை காங்கயம் அருகே உள்ள சாவடி பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (28) என்பவா் ஓட்டிச் சென்றாா். வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் அா்ச்சுனாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே முத்தூரில் இருந்து நத்தக்காடையூா் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியின் மீது நேருக்கு நோ் மோதியது.

இந்த விபத்தில் சரக்கு வேனின் முன்பகுதி லாரியின் முன் பகுதிக்குள் புகுந்து உள்ளே சிக்கி நின்றது. லாரிக்கு அடியில் வேனுக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓட்டுநா் குணசேகரனை அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் மீட்க முயற்சித்தனா். ஆனால், முடியவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து, கிரேன், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி குணசேகரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு குணசேகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. லாரியின் முன்பக்கமும் சேதமடைந்தது. லாரி ஓட்டுநா் காயங்கள் எதுவுமின்றி உயிா்தப்பினாா். விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments