முகப்பு
இன்றைய நிகழ்ச்சிகள்

திருச்சி

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி: மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா, பங்கேற்பு- அமைச்சர் என்.ஆர்.சிவபதி, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன்,பல்கலைகழக வளாகம், பிற்பகல் 12.
 பாரதமிகுமின் நிறுவனம் : பெல் தினக் கொண்டாட்டம், சிறப்புரை- நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஏ.வி. கிருஷ்ணன் நிறுவன வளாகம், காலை 9.
 பாரதிதாசன் பல்கலைக்கழக வணிகவியல் மற்றும் நிதிக் கல்வியியல் துறை, ஸ்மார்ட் : நிதிச் சந்தை: பிரச்னைகள் மற்றும் சவால்கள் என்ற 8-வது பன்னாட்டு கருத்தரங்கத் தொடக்க விழா மற்றும் நான்காவது ஸ்மார்ட் விருது வழங்கும் விழா, பங்கேற்பு- பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. மீனா, குளிர்மை கலையரங்கம், பல்கலைக்கழக வளாகம், காலை 10.
 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலம் : 21-வது சாலைப் பாதுகாப்பு வார விழா- பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரைப் போட்டிகள், மண்டல அலுவலகம், பெரியமிளகுப்பாறை, காலை 10.
 டிரேஸ் : - டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், பங்கேற்பு- துணைப் பதிவாளர்கள் ஐ. பழனீசுவரி, வி. வெங்கடலட்சுமி, கலையரங்கம் திரையரங்கு வளாகம், முற்பகல்11.
 ஜமால் முகமது கல்லூரி உள்தர உறுதிக் குழு : மென்திறன் புல மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நிறைவு விழா, பங்கேற்பு- கல்லூரி முதல்வர் ஆர். காதர் மொகைதீன், வணிகவியல் அரங்கம், கல்லூரி வளாகம், பிற்பகல் 3.30, ஜமால் முகமது கல்வியியல் கல்லூரி: குடிமைப் பயிற்சி முகாமைத் தொடக்கி வைப்பவர்- மாநகராட்சிப் பொறியாளர் எஸ். ராஜா முகமது, கல்லூரி வளாகம், காலை 9.
 செண்பகத் தமிழ் அரங்கு : சொற்பொழிவு, நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் என்ற தலைப்பில் பேசுபவர்- முனைவர் சண்முக செல்வகணபதி, அரங்கு வளாகம், காந்தி சாலை, ஸ்ரீரங்கம், மாலை 6.
 ஆன்மிகம்
 அகில பாரத சாது சங்கம்: ஸ்ரீமத் பாகவதம் தசமஸ்கந்தம் - அக்ரூராகமனம் - ஸ்ரீரங்கம் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள், சுமங்கலி மஹால், திருவானைக்கா, இரவு 7.
 வாகீச பக்த ஜனசபை, சமரச சுத்த சன்மார்க்க சங்கம்: 57-ம் ஆண்டு மார்கழி தொடர் விரிவுரை,"அட்டவீரட்டத்தலங்கள்: திருப்பறியலூர்- தக்கன்யாகம் அழித்தது' என்ற தலைப்பில் பேசுபவர்: இரா. மாணிக்கவாசகன், சங்கக் கட்டடம், உறையூர், மாலை 6.
 ராமானுஜ சித்தாந்த சபை: ஆண்டாள் அருளிய திருப்பாவை தொடர் உரை: உ.வே. பராசர பத்ரி நாராயண பட்டர், கமலவல்லி நாச்சியார் கோவில், உறையூர், மாலை 6.45.
 மண்ணச்சநல்லூர்:
 மண்ணச்சநல்லூர் வாணியர் சங்கம்: பகவதி அம்மன் கோவில் 112-ம் ஆண்டு திருவிழா, ஸ்ரீ அன்னபூரணி அம்மன் அலங்காரம், கோவில் வளாகம், மாலை 6.
 சமயபுரம்
 எஸ்ஆர்வி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி : விஸ்டாஸ் 2013, 7-வது ஆண்டு விழா, பங்கேற்பு- திருச்சி மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், தலைமை- பள்ளித் தலைவர் ஏ. ராமசாமி, பள்ளி வளாகம், சமயபுரம், மாலை 5.
 மாத்தூர்
 எஸ்எம்ஆர் கல்வியியல் கல்லூரி: குடிமைப் பயிற்சி முகாமைத் தொடக்கி வைப்பவர்- கல்லூரி நிர்வாக அறங்காவலர் எம்.ஆர். அருண், பங்கேற்பு- அகொதெமி இயக்குநர் உமா அருண், கல்லூரி கருத்தரங்க அரங்கு, காலை 10.
 போதாவூர்
 மாவட்ட நிர்வாகம் : விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா, பங்கேற்பு- அமைச்சர் என்.ஆர்.சிவபதி, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன்,போதாவூர், உய்யகொண்டான்திருமலை, பிற்பகல் 3.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →