மகிந்திரா 9இ சினிலக்ஸ்: புது எடிஷன் அறிமுகம்!
மின்சார எஸ்யூவியின் புதிய ஆடம்பர கார்..
கார் விற்பனையில் எப்போதும் முன்னணியில் இருக்கும் மகிந்திரா நிறுவனம், தனது அடுத்த எலெக்ரிக் காரான எக்ஸ் இவி 9இ சினிலக்ஸ் என்ற மின்சார எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
சந்தையில் எக்ஸ் இவி 9இ சினிலக்ஸ் எடிஷனுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால், எஸ்யூவி காரின் மார்க்கெட்டை விரிவுபடுத்துவதில் மகிந்திரா நிறுவனம் தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறது. அந்த வகையில், எக்ஸ்இவி 9இ மின்சார காரின் மேம்பட்ட ஆடம்பர பதிப்பாக சினிலக்ஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆடம்பரம் மட்டுமல்லாது, நுட்பமான கைவினைத்திறன், அதிநவீன தொழில்நுட்பம் போன்ற சிறந்த அனுபவங்களை சினிலக்ஸில் புகுத்தியுள்ளது.
Advertisement
இந்த கார் பேக் 3 மாடலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 79 கிலோவாட் ஹவர் லித்தியம் - அயன் பேட்டரி இடம் பெற்றுள்ளது.
முழு சார்ஜில் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாகப் பயணம் செய்ய முடியும். தோற்றத்தில் சொகுசு உணர்வை வழங்கும் வகையில் உயர்தர பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புதிய எக்ஸ்இவி 9இ சினிலக்ஸ் எடிஷன் சாடின் கருப்பு (Satin Black), சாடின் வெள்ளை (Satin White) போன்ற பிரத்யேக வெளிப்புற கலர் ஆப்ஷன்களுடன் வந்துள்ளது.
அதோடு, புதிய செஸ்ட்நட் பிரௌன் (Chestnut Brown), நாக்டியூர்ன் கருப்பு (Nocturne Black) ஆகிய நிறங்களில் உள் அலங்காரங்கள் இந்த ஸ்பெஷல் எடிஷன் காரின் உள்புற அழகை மேலும் அதிகமாக்குகிறது.
இதன் விலை ரூ. 29.35 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. சந்தையில் இவி கார்களுக்கு மத்தியில் மகிந்திராவின் புதிய எக்ஸ் இவி 9இ சினிலக்ஸ் எடிஷன் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.