வணிகம்

ஆகஸ்ட் மாத ஏற்றுமதி ரூ.1.41 லட்சம் கோடி

இந்தியாவின் ஏற்றுமதி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 2,151 கோடி டாலராக (ரூ.1.41 லட்சம் கோடி) இருந்தது என்று மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவின் ஏற்றுமதி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 2,151 கோடி டாலராக (ரூ.1.41 லட்சம் கோடி) இருந்தது என்று மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சென்ற ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோலியம், தோல் உள்ளிட்டப் பொருள்களின் ஏற்றுமதி குறைந்தது. அதையடுத்து அந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2,151 கோடி டாலராக இருந்தது.
கடந்த நிதி ஆண்டின் ஆகஸ்ட் மாத ஏற்றுமதி மதிப்பான 2,158 கோடி டாலருடன் ஒப்பிடும்போது இது 0.3 சதவீதம் குறைவாகும்.
இறக்குமதி 14% குறைந்து 2,991 கோடி டாலராக இருந்தது. வர்த்தகப் பற்றாக்குறை 767 கோடி டாலராக காணப்பட்டது.
குறிப்பாக, தங்கம் இறக்குமதி 77.45% வீழ்ச்சி கண்டு 111 கோடி டாலராகவும்,  கச்சா எண்ணெய் இறக்குமதி 8.47% சரிந்து 674 கோடி டாலராகவும்  காணப்பட்டது என்று மத்திய வர்த்தக அமைச்சகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்வு: தலைவா்கள் கண்டனம்!

பிகாரில் அனைத்து வாக்காளா்களுக்கும் புதிய அட்டை: தோ்தல் ஆணையம் திட்டம்

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு!

பின்னாலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு!

SCROLL FOR NEXT