வணிகம்

ரூ.999-க்கு நோக்கியா செல்லிடப்பேசி நாளை முதல் விற்பனை

நோக்கியா பிராண்ட் செல்லிடப்பேசிகளை விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம், ரூ.999 விலையில்

DIN

நோக்கியா பிராண்ட் செல்லிடப்பேசிகளை விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம், ரூ.999 விலையில் செல்லிடப்பேசிகளை புதன்கிழமை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
உள்நாட்டு சந்தையில் குறைந்த விலை செல்லிடப்பேசிகளுக்கு அதிகத் தேவை உள்ளது. இதனை உணர்ந்து, நோக்கிய 105 மாடல் செல்லிடப்பேசியின் விலையை ரூ.999-ஆகவும், இரட்டை சிம் வசதி கொண்ட செல்லிடப்பேசியின் விலையை ரூ.1,149-ஆகவும் நிர்ணயித்துள்ளோம். 1.8 அங்குல திரை, எல்இடி விளக்கு வசதி கொண்ட அந்த இரண்டு மாடல் செல்லிடப்பேசிகளும் வரும் புதன்கிழமை முதல் அங்காடிகளில் விற்பனைக்கு வரும்.
நோக்கியா 130 மாடல் செல்லிடப்பேசியை ரூ.1,500 விலையில் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளோம்.
இணைய வசதி இல்லாத, பேசுவதற்காகவும், குறுந்தகவல்களை அனுப்புவதற்காகவும் செல்லிடப்பேசியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலக அளவில் 400 கோடியாக உள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் இவ்வகை போன்கள் விற்பனை 40 கோடியாக இருந்தது என்று எச்எம்டி குளோபல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவில் நிஃபா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

சிவகங்கை மாவட்டத்துக்கு முதல்வர் 2 நாள் பயணம்! மினி டைடல் பூங்கா நாளை திறப்பு!

4 மாத கர்ப்பிணி, தில்லி போலீஸ் கமாண்டோவை அடித்துக் கொலை செய்த கணவர்! அதிர்ச்சித் தகவல்கள்!

வீட்டுக் கடன் நிறைவடைந்ததும் வங்கியிலிருந்து வாங்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்!

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT