இந்தியாவில் ஜியோமியின் மூன்று புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலைகள்
: சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் இந்தியாவில் மேலும் மூன்று புதிய ஸ்மார்ட்போன் ஆலைகளை அமைத்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் இந்தியாவில் மேலும் மூன்று புதிய ஸ்மார்ட்போன் ஆலைகளை அமைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும், இந்திய பிரிவின் நிர்வாக இயக்குநருமான மனு ஜெயின் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஜியோமிக்கு முன்னதாகவே இரண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. தற்போது தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியில் மேலும் கூடுதலாக மூன்று ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலைகள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் கூட்டு கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய சந்தைகளில் ஜியோமி போன்களுக்கான தேவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டு வருகிறது. எனவே, உள்நாட்டுத் தேவையை ஈடு செய்ய இந்த விரிவாக்கத் திட்டம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
இதைத் தவிர, நொய்டாவில் ஹிப்பாட் நிறுவனத்துடன் கூட்டணி கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்களையும் ஜியோமி தயாரித்து வருகிறது என்றார் அவர்.