விஸ்டாரா விமான கட்டணம் 75% வரை குறைப்பு
விஸ்டாரா விமான சேவை நிறுவனம் குறுகிய கால சலுகையாக விமான கட்டணத்தை 75 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
விஸ்டாரா விமான சேவை நிறுவனம் குறுகிய கால சலுகையாக விமான கட்டணத்தை 75 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சலுகை திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஜூன் 21 முதல் செப்டம்பர் 27 வரை பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு வழக்கமான கட்டணத்திலிருந்து 75 சதவீதம் வரை கட்டணச் சலுகை அளிக்கப்படும். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கிய இந்த பயண சலுகை திட்டம் 24 மணி நேரத்துக்கு மட்டுமே அமலில் இருக்கும் என விஸ்டாரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.