முகப்பு
வணிகம்

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை 30 பைசாக்கள் குறைந்து ரூ.74.06 ஆகியுள்ளது.

Updated On : 9 அக்டோபர் 2018, 12:54 am IST
பகிர்:


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை 30 பைசாக்கள் குறைந்து ரூ.74.06 ஆகியுள்ளது.
இது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வீழ்ச்சியாகும்.
டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதாலும், கச்சா எண்ணையின் விலை அதிகரித்து வருவதாலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வட்டி விகிதங்களை அமெரிக்க ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதன் காரணமாக, டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.