சொகுசு மோட்டார் சைக்கிள் ப்ரண்டனா 'டுகாட்டி' இந்தியாவில் அதன் புதிய 'டயவெல் 1260' மற்றும் '1260 எஸ்' ஆகிய ரகங்களை ரூ. 17.70 லட்சம் மற்றும் ரூ. 19.25 லட்சம் என்ற (எக்ஸ் ஷோரூம் பான் இந்தியா) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய டயவெல் 1260 புதிய டெஸ்டாஸ்ட்ரெட்டா டி.வி.டி எல்-ட்வின் 1262 சிசி எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 159 பி.எஸ்ஸை 9,500 ஆர்.பி.எம்மிலும் மற்றும் 129 என்.எம் டார்க்கில் @7,500 ஆர்.பி.எம் யை வழங்குகிறது. இதன்மூலம் வளைவுகளிலும் தடையில்லா வேகத்துடன் சிரமமில்லா பயணத்தை எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அருமையான நேர்த்தியைக்கொண்ட சூப்பர் பைக் மற்றும் க்ரூஸரின் சவாரி நெறிமுறைகளை ஒருங்கிணைத்து இன்னும் அனைத்து கூறுகளையும் புதுப்பித்த நிலையில் கொண்டுள்ளது.
இந்த புதிய பைக் அறிமுகத்தின் போது டுகாட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் செர்கி கனோவாஸ் பேசுகையில்,
டயவெல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பைக்குகளில் இது ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தோற்றம் மற்றும் சக்தியின் மூலம் இளைஞர்கள் அதிகம் விரும்பும் கனவு பைக்காக இருக்கப்போவது உறுதி. ஏனென்றால் க்ரூஸர் மற்றும் சூப்பர் பைக் ஆகிய இரு வகைகளின் திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே முந்தைய பைக் வகைகளை விட இது புது விதமாக அமைந்துள்ளது. இதனால் சாலைகளில் 'மெகா மான்ஸ்டராக' இதன் ஆதிக்கம் விரைவில் தொடங்கப்போகிறது. இந்தியாவில் டயவெல் அதிகம் விரும்பப்படும் என்று நம்புகிறோம். இந்திய சாலைகளை விரைவில் டயவெல் ஆக்கிரமிக்கும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.