வணிகம்

ஃபுஜிபிலிம் நிறுவனத்தின் முதல் மிரர்லெஸ் டிஜிட்டல் கேமரா அறிமுகம்!

DIN

ஜப்பானிய போட்டோகிராபி மற்றும் இமேஜிங் நிறுவனம் ஃபுஜிபிலிம், எக்ஸ்-ப்ரோ 3 என்ற முதல் டிஜிட்டல் கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. இலகுரக டைட்டானியத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் கேமரா தரமான புகைப்படம் எடுக்க உதவுகிறது.

'இந்தியாவில் புகைப்படத் துறையை மேலும் வளர்க்கும் நோக்கத்துடன், எங்கள் வாடிக்கையாளர்களை சிரமமின்றி புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ள வழிவகை செய்கிறது. அதே வேளையில் வலுவான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம். எக்ஸ்-ப்ரோ 3 புகைப்பட உலகில் பல சாத்தியங்களை உருவாக்கும்' என்று நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

பின்-ஒளிரும் 26.1MP 'எக்ஸ்-டிரான்ஸ்' சிஎம்ஓஎஸ் 4 சென்சார் மற்றும் 'எக்ஸ்-ப்ராசசர் 4 பட செயலாக்க இயந்திரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது பயனருக்கு சரியான, தரமான படத்தை தருகிறது. மேலும்,  எக்ஸ்-ப்ரோ 3 'அட்வான்ஸ்டு ஹைபிரிட் வ்யூஃபைண்டர்' உள்ளது. எலக்ட்ரானிக் வ்யூஃபைண்டர் மற்றும் ஆப்டிகல்  வ்யூஃபைண்டர் ஆகியவற்றுக்கு இடையில் மாறக்கூடிய தன்மை கொண்டது. 

இதுதவிர, புஜிஃபிலிமிஸ்-இன் தனித்துவமான ஃபிலிம் சிமுலேஷன் செயல்பாட்டுடன் புதிய 'கிளாசிக் நெக்' உள்ளது. இதனால் பயனர்கள் பல உயர் தரமான படங்களை அனுபவிக்க முடியும்.

'எக்ஸ்-புரோ 3' மிரர்லெஸ் டிஜிட்டல் கேமரா இந்தியாவில் ரூ.1,55,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT