70 சதவிகித பெற்றோர் இணையத்திற்கு அடிமைதான்! ஆய்வு முடிவு
சுமார் 70 சதவிகித பெற்றோர்கள் தாங்களே ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவதாக ஒப்புக் கொள்கிறார்கள்.
சுமார் 70 சதவிகித பெற்றோர்கள் தாங்களே ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவதாக ஒப்புக் கொள்கிறார்கள். 72 சதவிகிதம் பேர் இணையம் மற்றும் மொபைல் சாதன பயன்பாடு பொதுவாக குடும்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக உணர்கிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் சில ஒழுங்குமுறையை ஊக்குவிக்கும் முயற்சியில், உலகளாவிய இணைய பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி நடத்திய ஆய்வில், 52 சதவிகிதம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இணையத்தை சரியான அளவு பயன்படுத்துவதாக நம்புகிறார்கள்.
ஆய்வில் கிடைத்த தரவுகளின்படி, எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதில் தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளை அதிகம் நம்புவதாகத் தெரிகிறது, பாதிக்கும் குறைவான (48 சதவிகிதம்) அம்மாக்களுடன் ஒப்பிடும்போது. கிட்டத்தட்ட ஐந்து பேரில் மூன்று பேர் (57 சதவிகிதம்) இந்த அணுகுமுறையை பின்பற்றுகிறார்கள்.
40 சதவிகித பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் நடவடிக்கைகள் அல்லது இணைய பயன்பாட்டை கட்டுப்படுத்தவோ அல்லது மேற்பார்வையிடவோ தேவையில்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் பயன்பாடு என்பது குழந்தைகளை ஆபத்தில் ஒரே ஒரு கிளிக்கில் சிக்க வைத்துவிடும்.
"இணையம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் குழந்தைகளுக்கு கேம் உட்பட பொழுதுபோக்கு விஷயங்களை வழங்குகின்றன, மேலும் அவர்களின் கவனத்தை நீண்ட நேரம் வைத்திருக்க அதில் பல யுக்திகள் உள்ளன. மெய் நிகர் உலகத்தில் சிக்கி தங்கள் பொழுதை கணக்கின்றி செலவு செய்து வரும் அவர்களுக்கு உண்மையான உலகம் இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பது கூட தெரிவதில்லை. குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் நேரத்தை குழந்தைகளுடன் செலவிடத் தயாராக இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பயனுள்ளதாக நேரத்தை செலவழிக்கவும், கூட்டுச் செயல்களைச் செய்யவும் வேண்டும், அப்போதுதான் குழந்தைகள் இந்த ஆன்லைன் மோகத்தை விட்டொழிப்பார்கள் என்று காஸ்பர்ஸ்கியில் நுகர்வோர் தயாரிப்பு நிறுவனத் தலைவர் மெரினா டிட்டோவா கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த நேரம் உண்மையில் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் இணைக்கவும், சிறப்பு பிணைப்புகளை உருவாக்கவும், நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் மிகவும் முக்கியமானது, அது மதிப்புமிக்கது" என்று டிட்டோவா கூறினார்.
தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாட்டிற்கான நேரத்தை பெற்றோர்கள் கட்டுப்படுத்தவில்லை, தவிரர அவர்களே இணையத்தில் சிக்கிக் கிடக்கிறார்கள் என்பதையும் கணக்கெடுப்பு காட்டுகிறது: 70 சதவிகிதம் பேர் இணையத்தில் அடிமையாக இருப்பதை ஒப்புக் கொண்டனர்.
மேலும், அவர்களில் 84 சதவிகிதம் பேர் இணைய இணைப்பு அல்லது மொபைல் சாதனங்களை தங்கள் குழந்தை அல்லது குழந்தைகளுக்கு முன்னால் வீட்டில் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டனர்.
தரவுகளின்படி, 51 சதவிகிதம் பேர் சில சமயங்களில் இணையம் மற்றும் மொபைல் சாதனங்களை தங்கள் குழந்தைகளுடன் உரையாடலுக்காக பயன்படுத்தினர்
உங்கள் பிள்ளைகள் தங்கள் நேரத்தை சரியான நேரத்தில் ஆன்லைனில் ஒதுக்க உதவுவதற்காக, உலகளாவிய இணைய பாதுகாப்பு நிறுவனம் முழு குடும்பத்திற்கும் விதிகளை அறிமுகப்படுத்துமாறு பரிந்துரைத்தது, எனவே குழந்தைகள் இணையத்தில் தனிமையாகவோ அல்லது நியாயமற்ற முறையில் தடை செய்யப்பட்டதாகவோ உணரவில்லை.
இதில் உணவு மேஜையில் தொலைபேசிகள் தேவை இல்லை, தூங்குவதற்கு முன் படுக்கையிலும் போன் வைத்திருக்க வேண்டாம் என்றும் இது வலியுறுத்துகிறது.