வணிகம்

ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய மே மாத ஜிஎஸ்டி வசூல்!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் மே மாதத்தில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

DIN

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் மே மாதத்தில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2019-ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் மொத்தம் ரூ.1,00,289 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இதில் (சி) ஜிஎஸ்டி ரூ.17,811 கோடி, (எஸ்) ஜிஎஸ்டி ரூ.24,462 கோடி, ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ரூ.49,891 கோடி (இறக்குமதி வரி ரூ.24,875 உட்பட) மற்றும் கூடுதல் வரி (செஸ்) ரூ.8,125 கோடி (இறக்குமதி வரி ரூ.953 உட்பட) வசூலாகியுள்ளது.

முன்னதாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1.13 லட்சம் கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்தது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து கிடைத்த அதிகபட்ச வருவாயாக இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

கருவிழிகள் பேசுதே... ஜன்னத் ஜுபைர்!

இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT