முகப்பு
வணிகம்

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 43 ஆயிரத்தைத் தாண்டியது; கிராமுக்கு இன்று ரூ. 46 உயர்வு!

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ. 43 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ. 43 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை காலை வணிகம் தொடங்கியதும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ. 46 உயர்ந்து ரூ. 5,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ. 368 உயர்ந்து ரூ.43,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி இன்று 2 ரூபாய் 20 காசுகள் குறைந்து ரூ.83.80-க்கு விற்கப்படுகிறது.

கரோனா தொற்று, பொருளாதார மந்த நிலை, டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 38 நாள்களில் சவரனுக்கு 6,480 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்........................... ரூ. 5,420

1 சவரன் தங்கம்...............................ரூ. 43,360

1 கிராம் வெள்ளி.............................ரூ. 83.80

1 கிலோ வெள்ளி.............................ரூ. 83,800

வியாழக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்........................... ரூ. 5,351

1 சவரன் தங்கம்...............................ரூ. 42,808

1 கிராம் வெள்ளி.............................ரூ. 79.30

1 கிலோ வெள்ளி.............................ரூ. 79,300

முழு கட்டுரையைப் படிக்க →