அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு எதிராக டிக்டாக் நிறுவனம் வழக்கு
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவில் செயல்படுவதற்கு தடைகோரும் அதிபர் டொனால்ர் ட்ரம்ப்பின் ஆணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவில் செயல்படுவதற்கு தடைகோரும் அதிபர் டொனால்ர் ட்ரம்ப்பின் ஆணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்க குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்புக் குறைபாட்டை காரணமாகக் கூறி டிக்டாக் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் செயல்பட அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. தொடர்ந்து டிக்டாக் நிறுவனத்தை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு ஒப்படைப்பது குறித்து முடிவெடுக்குமாறும் ட்ரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே, டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டை கையகப்படுத்துவது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
Advertisement
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டிக்டாக் நிறுவனம் அமெரிக்க பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் அதிபர் ட்ரம்ப் மற்றும் வர்த்தக அமைச்சருக்கு எதிராக கலிபோர்னியாவின் மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து “எங்கள் உரிமைகள் மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிக்டாக் நிறுவனத்தின் வழக்குக்கு வெள்ளை மாளிகை இதுவரை பதிலளிக்கவில்லை.