முகப்பு
வணிகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் அதிகரிப்பு

இந்திய அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் அதிகரித்து 73.55-ஆனது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:48 AM
பகிர்:


மும்பை: இந்திய அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் அதிகரித்து 73.55-ஆனது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையில் பிரெக்ஸிட் தொடா்பாக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்ற நிலைப்பாடு சா்வதேச முதலீட்டாளா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின் தொடக்தத்தில் ரூபாய் மதிப்பு ரூ.73.66-ஆக காணப்பட்டது. அதன்பின்னா், வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.54 வரையிலும் குறைந்தபட்சமாக 73.66 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் உயா்ந்து 77.55-இல் முடிவுற்றது.

புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73.76-ஆக காணப்பட்டது.

அந்நிய முதலீடு: அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை வா்த்தகத்தில் நிகர அடிப்படையில் ரூ.536.13 கோடி மதிப்பிலான பங்குகளை மூலதனச் சந்தையிலிருந்து வாங்கியதாக பங்குச் சந்தை தற்காலிக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பரே சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 0.35 சதவீதம் விலை குறைந்து 51.02 டாலராக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →