முகப்பு
வணிகம்

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,861 புள்ளிகள் ஏற்றம்

​மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,861 புள்ளிகள் ஏற்றமடைந்துள்ளன.

Updated On : 25 மார்ச், 2020 at 6:35 PM
பகிர்:


மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,861 புள்ளிகள் ஏற்றமடைந்துள்ளன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவ்வப்போது கடும் சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை புதன்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகம் 1,861.75 புள்ளிகள் உயர்ந்து 28,535.78 புள்ளிகளில் நிலைத்தது. இது முந்தைய வர்த்தகத்தைக் காட்டிலும் 6.98 சதவீதம் அதிகமாகும். முன்னதாக, 26,674.03 புள்ளிகளில் நிறைவடைந்த பங்குச் சந்தை வர்த்தகம், புதன்கிழமை 26,499.81 புள்ளிகளில் தொடங்கியது. இன்றைய தினத்தில் அதிகபட்சமாக 28,790.19 புள்ளிகளிலும், குறைந்தபட்சம் 26,359,91 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

Advertisement

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகம் நிஃப்டி 516.80 புள்ளிகள் உயர்ந்து 8,317.85 புள்ளிகளில் நிலைத்தது. இது முந்தைய வர்த்தகத்தைக் காட்டிலும் 6.62 சதவீதம் அதிகமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.