பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்; சென்செக்ஸ் 400 புள்ளிகள் ஏற்றம்
பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.
பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.
சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்தது. நிஃப்டியும் 12,650 புள்ளிகளாக உயர்ந்து வர்த்தகமானது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 293.42 புள்ளிகள் உயர்ந்து 43,558 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.65 சதவிகிதம் உயர்வாகும்.
Advertisement
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104.50 புள்ளிகள் உயர்ந்து 12,725 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.76 சதவிகிதம் உயர்வாகும்.
பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. இதேபோன்று கோட்டாக், எஸ்.பி.ஐ., எம்&எம், ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்வுடன் காணப்பட்டன.
வோடாபோன், அசோக் லேலண்ட், நெஸ்ட்லே ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. அதிகபட்சமாக இந்துஸ்இந்த் வங்கி 3.16 சதவிகிதம் சரிவைச் சந்தித்தது.