முகப்பு
வணிகம்

பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வுடன் இன்று தொடங்கின.

Updated On : 8 அக்டோபர், 2020 at 11:27 AM
கோப்புப்படம்
பகிர்:

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வுடன் இன்று தொடங்கின.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 487.99 புள்ளிகள் உயர்ந்து 40,376 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் 1.25 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 140.10 புள்ளிகள் உயர்ந்து 11,878 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் 1.19 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கிய நிலையில், இன்று உயர்வுடன் பங்குச்சந்தைகள் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

வர்த்தக தொடக்கத்தில் தொழில்நுட்பத்துறையின் பங்குகள் தலைமையிலான பிரிவுகளில் ஆரோக்கியமான கொள்முதல் காணப்பட்டன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.