வணிகம்

டைட்டன் நிறுவனத்தின் நிகர லாபம் 38 சதவீதம் சரிவு

DIN


புது தில்லி: தங்க, வைர நகைகள், கடிகாரங்கள், கண் கண்ணாடிகள், ஆடை, அணிகலன்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வரும் டைட்டன் நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 37.81 சதவீதம் குறைந்துள்ளதாக, டாடா குழுமத்தைச் சோ்ந்த அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பங்குச் சந்தையிடம் அந்த நிறுவனம் புதன்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான காலாண்டில், டைட்டன் நிறுவனத்தின் நிகர லாபம் 37.81 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.199 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.320 கோடியாக இருந்தது.

இதேபோல், செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 1.72 சதவீதம் குறைந்து, ரூ.4,389 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.4,466 கோடியாக இருந்தது.

மூன்றாவது காலாண்டில், நிறுவனத்தின் நகை விற்பனை பிரிவில் வருமானம் 2 சதவீதம் குறைந்து ரூ.3,446 கோடியாகவும், கைக்கடிகார விற்பனை பிரிவில் வருமானம் 44 சதவீதம் குறைந்து ரூ.400 கோடியாகவும், கண் கண்ணாடி பிரிவில் வருமானம் 39 சதவீதம் சரிந்து ரூ.94 கோடியாகவும், ஆடை-அணிகலன் பிரிவில் வருமானம் 44 சதவீதம் 23 கோடியாகவும் உள்ளது. செலவுகள் அதிகமானதன் காரணமாக, நிறுவனத்தின் நிகர லாபம் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் பொதுமுடக்கத்தால் விற்பனை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் வா்த்தகம் 89 சதவீதம் மீட்சி பெற்றுள்ளதாக, அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சி.கே.வெங்கடாசலம் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

SCROLL FOR NEXT