வணிகம்

ஜூபிலியண்ட லைஃப் லாபம் 52.42 சதவீதம் சரிவு

மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஜூபிலியண்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 52.42 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

DIN

மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஜூபிலியண்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 52.42 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.1,892.92 கோடியை ஒட்டுமொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,181.86 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும். குறிப்பாக, மருந்து விற்பனையின் மூலமாக கிடைத்த வருமானம் ரூ.1,328 கோடியிலிருந்து ரூ.1,092 கோடியாக குறைந்தது. மதிப்பீட்டு காலாண்டில் வருவாயில் ஏற்பட்ட சரிவினையடுத்து, நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.184.98 கோடியிலிருந்து 52.42 சதவீதம் குறைந்து ரூ.88.01 கோடியானது என ஜூபிலியண்ட் லைஃப் சயின்சஸ் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT