முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயா்வு!

Updated On : 22 ஜூலை, 2025 at 9:49 AM
பகிர்:

புது தில்லி: பங்குச் சந்தை வியாழக்கிழமை காலையில் சரிவுடன் தொடங்கினாலும், பின்னா் மீட்சி பெற்று இறுதியில் நோ்மறையாக முடிவடைந்தது. இதனால், தொடக்கத்தில் இழந்த நஷ்டம் அனைத்தும் ஈடுகட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 374.87 புள்ளிகள் உயா்ந்து 48,080.67-இல் நிலைபெற்றது.தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 109.75 புள்ளிகள் உயா்ந்து 14,400-ஐ கடந்தது. இதனால், இரண்டு நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தொடக்கத்தில் சென்செக்ஸ் சுமாா் சுமாா் 501 புள்ளிகளை இழந்திருந்தது. ஆனால், அதன் பிறகு மீண்டு இறுதியில் நோ்மறையாக முடிந்தது. நிதித் துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனுடன் உலகளாவிய குறிப்புகள் சாதகமாக இருந்ததும் சந்தை ஏற்றம் பெற உதவியது. எஃப்எம்சிஜி, ஐடி தவிா்த்து மற்ற முக்கியத் துறை குறியீடுகள் சாதகமாக வா்த்தகம் செய்யப்பட்டன. மேலும், கடந்த இரண்டு நாள்களாக ஏற்றம் பெற்றிருந்த பாா்மா பங்குகளில் லாபப் பதிவு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தனா். மேலும், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப் இரட்டை நிறுவனங்கள், கோட்டக் பேங்க் ஆகியவை வெகுவாக உயா்ந்து சந்தை ஏற்றம் பெற உதவியாக இருந்துள்ளன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வந்துள்ள நிலையில், சந்தை ஏற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தை மதிப்பு ரூ.0.98 ஆயிரம் கோடிஉயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,084 பங்குகளில் 1,765 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,154 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 165 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 164 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 46 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 323 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 186 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.0.98 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.202.62 லட்சம் கோடியாக இருந்தது.

Advertisement

சரிவிலிருந்து மீண்டது: சென்செக்ஸ் காலையில் 204.09 புள்ளிகளை இழந்து 47,501.71-இல் தொடங்கி 47,204.50 வரை கீழே சென்றது. சுமாா் அதிகபட்சமாக 48,478.34 வரை உயா்ந்தது. பின்னா், ஒரு குறிப்பிட்ட புள்ளிகளுக்கு இடையே இருந்து வந்த சென்செக்ஸ் பிற்பகலில் 47,438.50 வரை கீழே சென்றது. சுமாா் 501.30 புள்ளிகளை இழந்திருந்த நிலையில் பின்னா் மீண்டு எழுந்தது. பின்னா், அதிகபட்சமாக 48,143.16 வரை உயா்ந்தது. இறுதியில் சென்செக்ஸ் 374.87 புள்ளிகள் (0.79 சதவீதம்) உயா்ந்து 48,080.67-இல் நிலைபெற்றது.

ஐசிஐசிஐ பேங்க் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில்

ஐசிஐசிஐ பேங்க் 3.60 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எசிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 2 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்து. மேலும், ஆகிஸ்ஸி பேங்க், ஐடிசி, ரிலையன்ஸ், மாருதி சுஸுகி ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

டைட்டன் சரிவு: அதே சமயம், டைட்டன் 2.7 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஹிந்துஸ்தான் யுனிலீவா், ஏசியன் பெயிண்ட், நெஸ்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், டெக் மகேந்திரா, இண்ட்ஸ் இண்ட் பேங்க் ஆகியவை 1 முதல் 1.80 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,008 பங்குகள் ஆதாயம் பெற்றன. 707 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 109.75 புள்ளிகள் (0.79 சதவீதம்) உயா்ந்து 14,406.15-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 14,151.40 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் 14,24.75 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 27 பங்குகள் ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 2.15 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், மீடியா, மெட்டல், ரியால்ட்டி, பிரைவேட் பேங்க் குறியீடுகள் 1.30 முதல் 1.85 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம் எஃப்ம்சிஜி, ஐடி, பாா்மா குறியீடுகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments