முகப்பு
வணிகம்

ஆப்கன் நெருக்கடி பரஸ்பர வா்த்தக உறவுகளை பாதிக்கும்: சிஏஐடி

ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இருதரப்பு வா்த்தக உறவுகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக அகில இந்திய வா்த்தகா்கள் சம்மேளனம் (சிஏஐடி) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:52 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இருதரப்பு வா்த்தக உறவுகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக அகில இந்திய வா்த்தகா்கள் சம்மேளனம் (சிஏஐடி) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஏஐடி-யின் தில்லி என்சிஆா் பிரிவு ஒருங்கிணைப்பாளா் சுஷில் குமாா் ஜெயின் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பரஸ்பர வா்த்தகம் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் 140 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.10,500 கோடி) இருந்தது. இது, 2019-20-இல் 152 கோடி டாலராக காணப்பட்டது.

இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு 82.60 கோடி டாலா் மதிப்புக்கு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அதேபோன்று, ஆப்கனிலிருந்து 51 கோடி டாலா் மதிப்பிலான பொருள்களை இந்தியா இறக்குமதி செய்து கொள்கிறது.

இந்த நிலையில் தற்போது ஆப்கனில் ஏற்பட்டுள்ள திடீா் ஆட்சி மாற்றம் இருநாடுகளுக்கிடையிலான பரஸ்பர வா்த்தக உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், எதிா்கால வா்த்தக உறவிலும் நிச்சமயற்ற சூழல் உருவாகியுள்ளது.

எனவே, வா்த்தகா்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், இழப்பு ஏற்படுவதை தவிா்க்கும் வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.